Monday, January 10, 2011

சந்தோஷம்

மு. கார்த்திக்
எப்போது கால்நனைத்தாய்
சந்தோஷத்தில்
துள்ளிக் குதிக்கும் மீன்கள்!

பட்டினி

மு. கார்த்திக்
எந்த அரிசியிலும்
என் பெயரில்லை போலும்
பத்துநாள் பட்டினி!

வறுமை

சபி. ஆன்சி
என் சட்டையைப் பார்
அந்தத் தையல்களில் தான்
என் வறுமை வரையப்பட்டுள்ளது.

சருகு

மு. கார்த்திக்
உதிரும் இலையைப் பார்த்து
நகைத்தது! மலரத் தொடங்கிய
சருகு!

வெயில்

செல்வகாந்தன்
நிழல் தரும் மரங்கள்
எப்படித் தாங்குமோ
வெயிலை

பாவம் நாற்காலி
நாம் அமர
அது நிற்கிறது 



ஓவியம்!

காகித தாஜ்மஹால்

ஜெயந்தி குமார்
மின்விளக்கை அணைத்தேன்.
பல்லியிடமிருந்து தப்பித்திருக்குமா...
தும்பி.

நீரூற்றியது தோட்டக்காரன்.
வியர்த்திருக்கிறது
பூச்செடிகளுக்கு!

வெளிச்சம் போட்டு
தேடியது மின்னல்.
கிடைக்கவில்லை நிலவு!

எட்டிப்பார்க்கும் பறவைக்குஞ்சு.
மரமேறும் பாம்பு.

நெருப்பைத் தந்தது
தூரிகை ஓவியம்!

பசிக்கும் போதெல்லாம்
விட்டத்தைப் பார்க்கும் மாடு.
தொழுவத்தில் குருவிக்கூடு.

வலை பின்னிக்கொண்டிருந்தது
ஒட்டடைக் குச்சியில்.

அணைந்தது மெழுகுவர்த்தி.
அறைக்குள் பாய்ந்தது
பதுங்கியிருந்த இருள்.

நதிக்கரை படகுக்கு
ஒரே ஒரு சக்கரம்.
நிலவு!

புதுக்குடையை
காண்பிக்கலாமென்றால்...
வரவில்லை மழை.

ஹைக்கூ கவிதை

காதலுக்கு கண் இல்லை

கூடல்.காம்
மனிதன் கடவுளாக...
காதலியின் கடிதம் தரும்
தபால்காரர்! 
 

தொழிற்கல்வி

கூடல்.காம்
மூட்டை தூக்கிக் கொள்ள
முன்பயிற்சி
நர்சரிப் பள்ளிகள் ... 
 

ஈர நினைவு

கூடல்.காம்
மேகத்திலிருந்து மழைத்துளி
துவட்டப்படாத அவள்
கூந்தல்! 
 

வயிற்றுப் பசி

கூடல்.காம்
மரக்கிளையில் தொட்டில்
களையெடுக்கும் தாய்
தொட்டில் குழந்தை 
 

இன எதிரி

கூடல்.காம்
கோடாரியின் கைப்பிடியிலும்
மரம்
இன எதிரி ... 
 

தலைகீழ்

கூடல்.காம்
மிதப்பதாக நினைத்து
மூழ்கினான்
குடிகாரன் ... 
 

எங்கும் உன்னோடு

கூடல்.காம்
வழிப்பயணம் முன்னோக்கி
நினைவுகளோ பின்னோக்கி
அவளை விட்டுப் பிரிகையில்! 
 

விடாது மழையிலும்

கூடல்.காம்
புயலுக்குப் பிறகு,
சிறுவன் ஆகாயத்தைத் துடைக்கிறான்.
மேசைகளின் மீதிருந்து!
 
 
 
 
 
 
 
 
 

அவலம்!

பி.என்.ஜெய்சங்கர், திருவாரூர்
வேரினை
இழந்த
மரங்கள்
வாழ்கிறது!
முதியோர் இல்லம்...!!

இதயம்

பொதிகை
கை அளவு இதயம்
சற்று பருத்துவிட்டது
உள்ளே நீ . . .!

முதலிடம்

கவிஞர் இரா.ரவி
விரைவில் கிட்டும்
உலக அளவில் முதலிடம்
ஊழல்!

காதலர்கள்

கவித்தாசபாபதி
இது
கல்லறையல்ல
கிளிக்கூடு...!
இவை
வானம் துரத்திய
வண்ணக்கிளிகள்...!
இவைகளின்
வானத்தை
திருடியவர்களே
ஏன்
வளையங்களோடு
வருகிறீர்கள்?