Monday, January 10, 2011

அவலம்!

பி.என்.ஜெய்சங்கர், திருவாரூர்
வேரினை
இழந்த
மரங்கள்
வாழ்கிறது!
முதியோர் இல்லம்...!!

இதயம்

பொதிகை
கை அளவு இதயம்
சற்று பருத்துவிட்டது
உள்ளே நீ . . .!

முதலிடம்

கவிஞர் இரா.ரவி
விரைவில் கிட்டும்
உலக அளவில் முதலிடம்
ஊழல்!

காதலர்கள்

கவித்தாசபாபதி
இது
கல்லறையல்ல
கிளிக்கூடு...!
இவை
வானம் துரத்திய
வண்ணக்கிளிகள்...!
இவைகளின்
வானத்தை
திருடியவர்களே
ஏன்
வளையங்களோடு
வருகிறீர்கள்?



18 comments:

  1. டாஸ்மாக் ஹைக்கூ இரா. இரவி, மதுரை

    அரசாங்கம் நடத்தும்
    அவமானச்சின்னம்
    டாஸ்மாக்

    பாதை தவறியவர்கள்
    போதை வாங்குமிடம்
    டாஸ்மாக்

    காந்தியடிகளுக்கு பிடிக்காத இடம்
    குடிமகன்களுக்கு பிடித்த இடம்
    டாஸ்மாக்

    குடிமகன்களிடமிருந்து கரந்து
    அரசாங்கத்திற்கு வழங்கும்
    கற்பக காமதேனு டாஸ்மாக்

    வருமானம் பெருகப் பெருக
    அவமானம் பெருகுகின்றது
    டாஸ்மாக்

    பாஸ் மார்க் வாங்கியும்
    க்ளாஸ் பாட்டிலுடன் வேலை
    டாஸ்மாக்

    ஈழம் அழிந்தாலும் கவலையின்றி
    தமிழினம் ஒழிந்தாலும் கவலையின்றி
    நிரம்பி வழியும் கூட்டம் டாஸ்மார்க்

    போதை சுகத்தில் குடிமகன்
    சொல்லில் அடங்கா சோகத்தில் குடும்பம்
    டாஸ்மாக்

    விதவைகளின் எண்ணிக்கையை
    விரிவாக்கம் செய்யுமிடம்
    டாஸ்மாக்

    வருங்கால தூண்கள்
    வழுக்கி விழுமிடம்
    டாஸ்மாக்

    இலவசமாய் நண்பன் தருவதாக
    இளித்துக் கொண்டு போகுமிடம்
    டாஸ்மாக்

    இமயமாக உயர வேண்டியவன்
    படு பாதாளத்தில் விழுமிடம்
    டாஸ்மாக்

    இரா. இரவி, மதுரை


    --
    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

    ReplyDelete
  2. ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி

    கோடி நன்மை
    கூடி வாழ்ந்தால்
    வா என்னவளே…

    வட்டிக்கு ஆசை
    முதலுக்கு கேடு
    தனியார் நிதிநிறுவனம்…

    வயிறு காய்ந்ததால்
    விலகியது வெட்கம்
    விலைமகள்..

    வாங்குகிற கை
    அலுக்காது
    இலஞ்சம்…

    உலையரிசி வேகுமா?
    வாய் கிழிய
    மேடைப்பேச்சு..

    கிணற்றில் விழலாமா?
    விளக்கை ஏந்தியபடி
    வாக்களிப்பு…

    விதையொன்று போட்டால்
    சுரையொன்று முளைக்கும்
    அரசியலில்…

    உண்டு கொழுத்தால்
    நண்டு வலையில் தங்காது
    போலிச்சாமியார்…

    எட்டாப் பழத்திற்குக்
    கொட்டாவி விடுவதேன்
    ஒருதலைக்காதல்…

    கடவுளை நம்பினோர்
    கைவிடப் படார்
    சபரிமலை யாத்திரைவிபத்து…?

    ReplyDelete
  3. மின்மினி ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    அற்ப ஆயுள்
    ஆனாலும் ஆனந்தம்
    மின்மினி

    மின்சாரமின்றி
    மின்விளக்கு
    மின்மினி

    இருளை உணர்த்தும்
    இனிய உன்னதம்
    மின்மினி

    பூமியில் பறக்கும்
    நட்சத்திரம்
    மின்மினி

    துணிவே துணை
    பயம் அறியாது
    மின்மினி

    ReplyDelete
  4. ஹைக்கூ – கவிஞர் இரா.ரவி

    எலிக்கு எதிரி
    குட்டிக்கு நண்பன்
    பூனையின் பல்…

    எல்லோரும் மகிழ்வாய்
    திருமண வீட்டில்
    தந்தை கடன் கவலையில்…

    கையில் வாங்கினான்
    அருகில் ஈட்டிக்காரன்
    ஊதியம்?…

    முரண்பாடு
    யானைக் கறுப்பு
    பேயரோ வெள்ளைச்சாமி…

    வந்த வழி தெரியாது
    செல்ல வழி கிடையாது
    காதல்…

    முயன்றதால் முடிந்தது
    உழைப்பினால் உருவானது
    குருவிக்கூடு…

    பிறர் சேமிப்பை
    அபகரித்தான் மனிதன்
    தேன்கூடு

    கண்ணால் காண்பதும் பொய்
    தேயும் தேய்வதில்லை
    நிலவு…

    அன்று கண்ணியம்
    இன்று களங்கல்
    கூட்டுறவு வங்கி…

    கொத்தனார் பணி
    அரசியல் பணியானது
    இடிப்பது கட்டுவது…

    ReplyDelete
  5. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


    கூடுதலாக உண்டு
    தாய்மண் பாசம்
    புலம் பெயர்ந்தவர்களுக்கு
    வெந்நீர் ஊற்றியபோதும்
    வளரும் செடிகள்
    புலம் பெயர்ந்தவர்கள்
    பயன்பட்டது
    சாக்கடைநீரும்
    தீ அணைக்க
    கூடலின் அருமை
    உணர்த்தியது
    ஊடல்
    ஈடில்லா வேகம்
    பின்னோக்கிப் பார்ப்பதில்
    மலரும் நினைவுகள்
    உடலின் மச்சமென
    நீங்காத நினைவு
    காதல்
    இனிமை இனிமை
    சின்னத் தீண்டல்
    சிந்தையில் கிளர்ச்சி
    கோலமிட்டுச் சென்றது
    சாலையில்
    தண்ணீர் லாரி
    பிணமானபின்னும்
    காசு ஆசை
    நெற்றியில் காசு
    தடுக்கி விழுந்ததும்
    தமிழ் பேசினான்
    அம்மா
    வந்துவிட்டது
    சேலையிலும் சைவம்
    சைவப்பட்டு
    கொன்ற கோபம்
    இன்னும் தீரவில்லை
    அதிரும் பறை
    உயராத கூலி
    உயரும் விலைவாசி
    வேதனையில் ஏழைகள்
    அயல்நாட்டில் ஊறுகாய்
    நம்நாட்டில் சாப்பாடு
    தொலைக்காட்சி
    மழை வந்ததும்
    உடன் வந்தது
    மண்வாசைனை

    ReplyDelete
  6. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    வானிலிருந்து வரும்
    திரவத்தங்கம்
    மழை

    இரண்டும் சமம்
    மலை மண்
    மழைக்கு

    கழுவும் நீரே
    அழுக்கு
    சுத்தம் ?

    ஓய்வுக்கு ஒய்வு
    தந்தால்
    சாதிக்கலாம்

    சாதனைக்கு
    முதல் எதிரி
    சோம்பேறித்தனம்

    தண்ணீரைப் பெட்ரோலாக்கி
    வித்தைக் காட்டியவரிடம்
    வித்தைக் காட்டியது இயற்கை

    எலி மீது யானை
    எப்படிச் சாத்தியம்
    பிள்ளையார்

    உருண்டது
    உலோகக் குண்டென
    தாமரையிலைத் தண்ணீர்

    கருவறை உள்ள
    நடமாடும் கடவுள்
    தாய்

    பல் பிடுங்கிய
    பாம்பாக
    தோற்ற அரசியல்வாதி

    இன்றும் சொல்கின்றது
    மன்னனின் பெயரை
    அரண்மனை

    பெருமூச்சு விட்டாள்
    தங்கக்கோபுரம் பார்த்து
    முதிர்கன்னி

    கல்லுக்குள் தேரை
    பாறைக்கு மேல் செடி
    மனிதனுக்குள் மனிதநேயம் ?


    -

    ReplyDelete
  7. மலர் சூட ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மலருக்கு தடை
    விதவை

    இயற்கையா? செயற்க்கையா?
    கூந்தல் மணம் மட்டுமல்ல
    பெண்களின் மனமும்தான்

    மலரே மலர் சூடியது
    கனியே கனி சுவைத்தது
    என்னவள்

    என்னைவிட என் பேனா
    அதிகம் நேசிக்கிறது அவளை
    அவளைப்பற்றியே எழுதுகிறது.

    விலை மதிப்பற்றது
    விற்க்க கூடாதது
    காதலி தந்த பரிசு

    உதட்டிட்க்கு பூசுங்கள்
    உள்ளத்திற்க்கு பூசாதீர்கள்
    சாயத்தை...

    உன் விழி கண்டு
    தாமரைகள் மலர்கின்றன
    ஆதவனுக்கு பொறாமை

    ReplyDelete
  8. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    நல்ல விளைச்சல்
    விளை நிலங்களில்
    மகிழ்ந்து நிறுவனங்கள்

    கத்துக்குட்டி உளறல்
    நதிநீர் இணைப்பு
    எதிர்ப்பு

    நல்ல முன்னேற்றம்
    நடுபக்க ஆபாசம்
    முகப்புப் பக்கத்தில்

    இன்று குடிநீர்
    நாளை சுவாசக்காற்று
    விலைக்கு வாங்குவோம்

    பெட்டி வாங்கியவர்
    பெட்டியில் பிணமானவர்
    பிணப்பெட்டி

    உணவு சமைக்க உதவும்
    ஊரை எரிக்கவும் உதவும்
    தீக்குச்சி

    நடிகை வரும் முன்னே
    வந்தது
    ஒப்பனை பெட்டி

    தனியார் பெருகியதால்
    தவிப்பில் உள்ளது
    அஞ்சல் பெட்டி

    தாத்தா பாட்டியை
    நினைவூட்டியது
    வெற்றிலைப்பெட்டி

    நகைகள் அனைத்தும்
    அடகுக் கடையில்
    நகைப்பெட்டி?

    மூடநம்பிக்கைகளில்
    ஒன்றானது
    புகார்ப்பெட்டி

    ReplyDelete
  9. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    மூளை மரணம்
    பயன்பட்டது பலருக்கு
    உடல் தானம்

    இருவருக்கு விழியானான்
    இறந்தவன்
    விழி தானம்

    உணர்த்தியது
    நிரந்தரமற்றது அழகு
    வானவில்

    இனிது இனிது
    தமிழில் இனிது
    அவள் பெயர்

    விஞ்ஞானிகளின் ராக்கெட்டை
    வென்றது சிவகாசிச்
    சிறுவனின் ராக்கெட்

    விலைவாசி ஏற்றம்
    ஊதியத்தில் இல்லை மாற்றம்
    வேதனையில் தனியார் பணியாளர்கள்

    ஆயிரம் பேரிலும்
    தனியாகத் தெரிந்தது
    அவள் விழிகள்

    விலை மதிப்பற்றது
    விவேகமானது
    அன்பு

    மலரும் நினைவு
    வளரும் கனவு
    அவள் முகம்

    ReplyDelete
  10. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
    ஆட்சியில் ஆள்பவர்களை விட
    மனதை ஆண்டவர்கள்
    மரித்த பின்னும் வாழ்கின்றனர்

    சிற்பி வீட்டு
    படிக்கல்லானாலும்
    சிலையாவதில்லை

    கோடிகள் கொள்ளை
    அடித்தாலும் முடிவு
    தற்கொலை கொலை

    பொம்மை உடைந்த போது
    மனசும் உடைந்தது
    குழந்தைக்கு

    தடியால் அடித்து
    கனிவதில்லை கனி
    குழந்தைகளும்தான்

    அனைவரும் விரும்புவது
    அதிகாரம் அல்ல
    அன்பு

    நிலம் விற்றுப்
    பெற்றப் பணத்தில்
    அப்பாவின் முகம்

    கால்களைத் தொட்டு
    வணங்கிச் சென்றன
    அலைகள்

    சிற்பி இல்லை
    சிற்பம் உண்டு
    நிலையானது எது ?

    போட்டியில் வென்றது
    புற அழகை
    அக அழகு

    நான் கடவுள் என்பவன்
    மனிதன் அல்ல
    விலங்கு

    அவளுக்கும் உண்டு
    மனசு மதித்திடு
    மனைவி

    ReplyDelete
  11. சுற்றுச் சுழல் விழிப்புணர்வு ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    முயன்றால் சாத்தியமே
    மரணமில்லாப் பெருவாழ்வு
    சுற்றுச் சுழல் பேணல்

    வீடு தெரு ஊர்
    சுத்தமானால்
    ஓடிவிடும் நோய்கள்

    தீமையின் உச்சம்
    மக்காத எச்சம்
    பாலித்தீன்

    உணர்ந்திடுக
    மரம் வெட்ட
    மழை பொய்க்கும்

    கரும் புகை
    பெரும் பகை
    உயிர்களுக்கு

    கண்ணுக்குப் புலப்படாது
    புலன்களை முடக்கும்
    கிருமிகள்

    தெரிந்திடுக
    காற்றின் மாசு
    மூச்சின் மாசு

    இயற்க்கை வரத்தை
    சாபமாக்கிச் சங்கடப்படும்
    மனிதன்

    அறிந்திடுக
    சுத்தம் சுகம் தரும்
    அசுத்தம் நோய் தரும்

    புரிந்திடுக
    செயற்கை உரம் தீங்கு
    இயற்க்கை உரம் நன்கு

    கட்சிக் கொடிகளை விட்டு
    பச்சைக் கொடிகளை வளருங்கள்
    பசுமையாகும்

    மதிக்கத் தக்கது
    ரசனை மிக்கது
    ரசாயணமில்லா விவசாயம்

    வேண்டாம் வேண்டாம்
    பூச்சிக் கொல்லி மருந்து
    மனிதனையும் கொல்கிறது

    தாய்ப்பால் இயற்க்கை உரம்
    புட்டிப்பால் செயற்க்கை உரம்
    வேண்டாம் உலகமயம்



    --
    இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    eraeravi.wordpress.com
    eraeravi.blogspot.com

    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

    ReplyDelete
  12. ஹைக்கூ
    காவிரி போல
    அரசியலானது
    கல்வி

    இனிமையானது
    உற்றுக்கேளுங்கள்
    ஓடும் நதியின் ஓசை

    பெண்ணைவிட
    ஆணே அழகு
    மயில்

    முடிந்தது சந்திப்பு
    தொடர்ந்தது அதிர்வு
    நினைவலைகள்

    பிரித்தது இலைகளை
    மரத்திலிருந்து
    காற்று

    குளத்தின் உயரம் கூட
    தானும் வளர்ந்தது
    தாமரை

    உண்மையை விட
    போலிகள் பொலிவாக
    செயற்கைச் செடிகள்

    கோலத்தை விட
    கோலமிட்டவள்
    கொள்ளை அழகு

    தோற்றத்தை விட
    குரல் அழகு
    குயில்

    சம்மதித்தனர்
    வரதட்சணைக் குறைக்க
    சொத்து வரும் என்பதால்

    வா வை விட
    ஏ பொருந்தும்
    வேலை வாய்ப்பு அலுவலகம்

    வருட வருமானம் லட்சத்தில் அன்று
    மாத வருமானம் லட்சத்தில் இன்று
    நிம்மதி ?

    பலன் இல்லை
    பெயர் மாற்றுவதால்
    எண்ணம் மாற்று

    பலவீனம்
    பறை சாற்றுதல்
    சோதிடம் பார்த்தல்

    மாதா பிதா
    குரு
    மனைவி

    கோபத்தைக் குறைக்கும்
    இதயத்தை இதமாக்கும்
    இலக்கியம்

    முக்காலமும் வாழ்பவர்
    எக்காலமும் வாழ்பவர்
    திருவள்ளுவர்

    தமிழ் என்ற சொல்லின்றி
    தமிழுக்கு மகுடம் சூட்டியவர்
    திருவள்ளுவர்

    தமிழன் என்ற சொல்லின்றி
    தமிழினத்திற்கு பெருமை சேர்த்தவர்
    திருவள்ளுவர்

    உலகின் முதல்மொழி
    மொழிகளின் தாய்மொழி
    தமிழ்

    இலக்கண இலக்கியங்களின்
    இனிய சுரங்கம்
    தமிழ்

    யுகங்கள் கடந்தும்
    இளமை குன்றாதது
    தமிழ்

    ReplyDelete
  13. அடுக்கக வீடும் உரிமை இல்லாச் சிறைதான் ! கவிஞர் இரா .இரவி

    அன்பளிப்பாக மரக்கன்று ஒன்று தந்தார்கள்
    அன்போடு வாங்கி வீடு சென்றேன்

    அழகான மரம் வளர்க்க ஆசை
    எங்கு நடலாம் என்று யோசித்தேன்

    வீட்டின் இடது வலது இருபுறமும் வீடு
    வீட்டின் முன் பின் இருபுறமும் வீடு

    வீட்டின் மேல் கீழ் இருபுறமும் வீடு
    பல லட்சம் தந்து வாங்கிய வீடு

    ஒரு மரக்கன்று நட உரிமை இல்லை
    அடுக்கக வீடும் உரிமை இல்லாச் சிறைதான்

    இயற்கை நேசத்திற்கு வழியில்லா அறைதான்
    வரும் வழியில் குடிசையைக் கண்டேன்

    வாங்கிய மரக்கன்றைத் தந்தேன் ஏழையிடம்
    வாங்கிய அவரோ உடன் வீட்டின் அருகே நட்டார்
    --
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    www.eraeravi.wordpress.com
    www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi
    http://en.netlog.com/rraviravi/blog
    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

    ReplyDelete
  14. அட்சய திரிதி கவிஞர் இரா .இரவி

    பகல் கொள்ளை
    ஆரம்பம்
    அட்சய திரிதி !

    உழைக்காமல் உண்ணும் சோம்பேறி
    சோதிடன் உளறல்
    அட்சய திரிதி !

    பெருகிட உயிரினமா ?
    தங்கம்
    அட்சய திரிதி !

    அடகில் மூழ்கியது
    வாங்கிய தங்கம்
    அட்சய திரிதி !

    மூடநம்பிக்கையின் உச்சம்
    ஏமாருவதே மிச்சம்
    அட்சய திரிதி !

    சோதிடன் நகைவணிகன்
    கூட்டுக் கொள்ளை
    அட்சய திரிதி !

    உலோகம் பெருகுமா ?
    யோசிக்க வேண்டாமா ?
    அட்சய திரிதி !

    தங்கத்தின் ஆசை
    தகர்த்திடுப் பெண்ணே
    அட்சய திரிதி !

    கொலை கொள்ளைப் பெருகிடக்
    காரணம் தங்கம்
    அட்சய திரிதி !

    குடும்பத்தின் நிம்மதி
    கெடுப்பது
    அட்சய திரிதி !

    தங்கத்தின் விலை ஏற்றதிற்குக்
    காரணம்
    அட்சய திரிதி !

    தரமற்றத் தங்கம்
    தரமென்று விற்கும்
    அட்சய திரிதி !

    ReplyDelete
  15. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    உயிரை அடிப்பான் கொள்ளை
    உடையின் நிறம் வெள்ளை
    வெண்சுருட்டு ( சிகரெட் )

    தேள் படம் போட்டும்
    கவலையின்றி சுவைக்கின்றான்
    வருங்கால் மன நோயாளி ! ( பான்பராக் )

    குடி குடி கெடுக்கும்
    படித்து விட்டு குடிக்கின்றான்
    படித்தவன் ?

    தெரிந்தே குடித்தனர்
    புற்று நோய் வரும்
    குளிர்பானம் !அழுதாலும்
    ஒளி தந்தது
    மெழுகு !

    வானிலிருந்து குதித்தும்
    காயம் இல்லை
    மழைத் துளி !

    சுமை அல்ல பாதுகாப்பு
    கூடு
    நத்தை !

    அவள் வரும் முன்னே
    வந்தது இசை ஓசை
    கொலுசு !

    சிதைத்தப் போதும்
    தந்தது வாசம்
    சந்தனம் !

    அன்று நல்லவர்களுக்கு மட்டும்
    இன்று கெட்டவர்களுக்கு மட்டும்
    அரசியல் !

    ReplyDelete
  16. ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

    தமிழர்களை விட
    சிங்களர் மீதே பாசம்
    இந்தியா !

    காற்றில் பறந்தது
    இந்தியாவின் மானம்
    இராணுவத்தில் ஊழல் !

    ஓழிக்க முடியவில்லை ஊழல்
    ஒழிக்கலாமா ?
    ஊழல்வாதிகளை !

    காமராஜ் கக்கன்
    காலத்தோடு முடிந்தது
    அரசியலில் தூய்மை !

    வாரிசு அரசியல்
    ஓழிக்க வழி
    வாரிசில்லாத் தலைவர் !

    தோழி ஆதிக்கம்
    ஓழிக்க வழி
    தோழி இல்லாத் தலைவி !
    மாற்றினர்
    தலைநகரை துக்ளக்
    புத்தாண்டை அரசியல்வாதிகள் !

    போதித்து
    அமைதி
    புத்தரின் சிலை !

    புத்தரை வணங்கியும்
    புத்திக் கெட்ட
    இலங்கை !

    இலைகள் உதிர்ந்தும்
    நம்பிக்கையோடு மரம்
    மழை வரும் !

    நீர் உயர
    தானும் உயந்தது
    தாமரை !

    வழக்கொழிந்தது
    கிராமங்களில்
    குலவைச் சத்தம் !

    நிலத்தையும்
    மலடாக்கியது
    மலட்டு விதை !

    தனியாக செல்கையில்
    துணைக்கு வந்தது
    நிலா !
    மரத்தை வாங்கியவன்
    பிய்த்து எறிந்தான்
    பார்வையின் கூட்டை !

    பதட்டம் இல்லை
    பற்றி எரிந்தும்
    உள்ளது காப்பீடு !

    மாதவம் செய்து
    மங்கையாகப் பிறந்து
    குப்பைத் தொட்டியில் !

    பணக்காரகளுக்கு அருகில்
    ஏழைகளுக்கு தூரத்தில்
    கடவுள் தரிசனம் !

    இன்றும் வாழும்
    கொடிய அரக்கன்
    தீண்டாமை !

    அத்திப் பூத்தாற்ப் போல
    நல்லவர்கள்
    காவல் துறையில் !

    சும்மா இருப்பதாகஅறிமுகப் படுத்தினார்கள்
    அனைத்து வேலை செய்யும்
    அம்மாவை !

    இல்லம் அலுவலகம்
    இரண்டிலும் வேலை
    பெண்கள் !

    கேட்டுப் பாருங்கள்
    கவலை மறக்கலாம்
    இசை !

    ReplyDelete
  17. ஒரு விதையின் வினா கவிஞர் இரா .இரவி

    பறவை ஒன்று பழத்தைத் தின்று
    கொட்டையை விட்டுச் சென்றது !

    மண்ணில் விழுந்த நான்
    மழை நீரால் துளிர்த்து வளர்ந்தேன் !

    நான் வளரக் காரணமான மழை
    வரக் காரணமானேன் நான் !

    உனக்கு நிற்க நிழல் தந்தேன்
    நீ புசிக்க நல்ல பழங்கள் தந்தேன் !

    நீ சுவாசிக்கத் தூயக் காற்றுத் தந்தேன்
    உந்தன் நோய் தீர்க்கும் மருந்து தந்தேன் !

    பறவைகளும் வந்து அமர்ந்து
    பழம் தின்று பறந்து சென்றன !
    நன்றி மறந்து என்னை பணத்திற்காக
    நீ விலைப் பேசி விற்று விட்டாய் !

    என்னை வாங்கியவன் வருகிறான்
    இரக்கமின்றி வெட்டக் கோடாரியோடு !

    என்னை விற்ற உன்னிடம் ஒரு கேள்வி
    என்னை விட்டுச் சென்றது ஒரு பறவை !
    என்னை நட்டவன் நீ இல்லை
    என்னை விற்க உனக்கேது உரிமை !

    ReplyDelete
  18. மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி


    இமயம் தொட முடியாது என்றார்கள்
    இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் !

    நிலவிற்கு செல்ல முடியாது என்றார்கள்
    நிலவிற்கு சென்று வந்தான் சாதனையாளன் !
    ஆழ்கடலில் நீந்த முடியாது என்றார்கள் ஆழ்கடலில் நீந்தி வந்தான் சாதனையாளன் !

    மனிதன் பறக்க முடியாது என்றார்கள்
    மனிதன் பறந்தான் விமானத்தில் !

    முடியாது என்பது மூடத்தனம்
    முடியும் என்பதே மூலதனம் !

    முடியாது என்பதை முடித்துக் காட்டு மண்ணில் நீயே எடுத்துக்காட்டு !

    நடக்காது என்பது அவ நம்பிக்கை
    நடக்கும் என்பதே தன்னம்பிக்கை !

    கிடைக்காது என்பது கோழைத்தனம்
    கிடைக்கும் என்பதே நல்ல குணம் !

    காலம் பொன் போன்றது அல்ல அல்ல
    காலம் பொன்னை விட மேலானது !

    பொன்னை வாங்கலாம் பணத்தால்
    காலத்தை வாங்க இயலாது பணத்தால் !

    ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்து
    ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காதே !

    வாய்ப்பு வருமென்று காத்திருக்காதே
    வாய்ப்பை உடன் நீயே உருவாக்கு !

    உந்தன் முதல் எதிரி சோம்பேறித்தனம்
    உன்னிடமிருந்து விரட்டிவிடு அவனை !

    உந்தன் நல்ல நண்பன் சுறுசுறுப்பு
    உன்னிடமே வைத்திடு அவனை !

    நாளை என்று நாளைக் கடத்தாதே
    இன்றே என்றே இனிதே முடித்திடு !

    முயற்சி மூச்சென எப்போதும் இருக்கட்டும்
    தளர்ச்சி தள்ளியே எப்போதும் இருக்கட்டும்

    வெற்றியை நீ தேடிச் செல்ல வேண்டாம்
    வெற்றி உனைத் தேடி வாசல் சேரும்

    மண்ணில் பிறந்தது வாழ்வதற்கு மட்டுமல்ல
    மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான்

    ReplyDelete