Monday, January 10, 2011

ஓவியம்!

காகித தாஜ்மஹால்

ஜெயந்தி குமார்
மின்விளக்கை அணைத்தேன்.
பல்லியிடமிருந்து தப்பித்திருக்குமா...
தும்பி.

நீரூற்றியது தோட்டக்காரன்.
வியர்த்திருக்கிறது
பூச்செடிகளுக்கு!

வெளிச்சம் போட்டு
தேடியது மின்னல்.
கிடைக்கவில்லை நிலவு!

எட்டிப்பார்க்கும் பறவைக்குஞ்சு.
மரமேறும் பாம்பு.

நெருப்பைத் தந்தது
தூரிகை ஓவியம்!

பசிக்கும் போதெல்லாம்
விட்டத்தைப் பார்க்கும் மாடு.
தொழுவத்தில் குருவிக்கூடு.

வலை பின்னிக்கொண்டிருந்தது
ஒட்டடைக் குச்சியில்.

அணைந்தது மெழுகுவர்த்தி.
அறைக்குள் பாய்ந்தது
பதுங்கியிருந்த இருள்.

நதிக்கரை படகுக்கு
ஒரே ஒரு சக்கரம்.
நிலவு!

புதுக்குடையை
காண்பிக்கலாமென்றால்...
வரவில்லை மழை.

No comments:

Post a Comment